விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில் கடந்த இரண்டு முறை வெற்றி பெற்ற பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 27 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இந்த நிலையில், தேர்தல் பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜன நாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. சர்வாதிகாரம், மட்டும் இருக்கும். அமலாக்கத்துறை அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வருகிறறது. அவர்கள் அனைத்தையும் சீண்டிப்பார்க்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பயத்தின் காரணமாக சிலர் நட்பை பிரிக்கிறார்கள். சிலர் கட்சியை பிரிக்கின்றனர். சிலர் கூட்டணியில் இருந்து பிரிக்கின்றனர். தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடடைசி வாய்ப்பு….அதன் பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.