வடகொரிய அரசியலில் புது திருப்பம்: கிம் யோ ஜாங்-கிற்கு முக்கிய பதவி!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:42 IST)
கிம் ஜாங் அன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங்-கிற்கு வடகொரியா அரசில் மிக முக்கிய   பதவி வழங்கப்பட்டுள்ளது. 

 
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள கிம் ஜாங் அன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் (வயது 34), எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் இருந்து வந்தார். 
 
இதனிடையே தற்போது இவருக்கு வடகொரியா அரசில் மிக முக்கியமான முடிவு எடுக்கும் அமைப்பான தேச விவகாரங்கள் கமிஷனில் (எஸ்.ஏ.சி.) உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அந்த நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரிய தீபகற்பத்தை இரண்டாகப் பிரித்த கொரியப் போர் 1953 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டாலும், அதிகாரப்பூர்வமா சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தப் போர் முடிவுற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார். 
 
அதற்கு அறிக்கை மூலமாகப் பதிலளித்திருந்தார் கிம் யோ-ஜோங்.  வடகொரியாவில் கிம் ஜோங் உன்னுக்குப் பிறகு அவரது சகோதரி கிம் யோ ஜோங் அதிகாரம் மிக்கவராகக் கருதப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்