தென் கொரியாவுடன் சமாதானப் பேச்சுக்கு வடகொரியா சம்மதம்

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (12:44 IST)
தென்கொரியாவுடன் பேச்சு நடத்த சம்மதம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கூறியுள்ளார்.

 
கொரிய தீபகற்பத்தை இரண்டாகப் பிரித்த கொரியப் போர் 1953-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டாலும், அதிகாரப்பூர்வமா சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியாகவில்லை.இந்தப் போர் முடிவுற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார்.
 
அதற்கு அறிக்கை மூலமாகப் பதிலளித்திருக்கும் கிம் யோ-ஜோங், சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார்.வடகொரியாவுக்கு எதிரான விரோதக் கொள்கைகளைக் கைவிட வேண்டும், தவறான முன்முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்திருக்கிறார்.
 
வடகொரியாவில் கிம் ஜோங் உன்னுக்குப் பிறகு அவரது சகோதரி கிம் யோ ஜோங் அதிகாரம் மிக்கவராகக் கருதப்படுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்