சோதனைகளை சாதனையாக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் !

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (23:53 IST)
உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 284 வாக்குகள் பெற்று பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46 வது அதிபராகப் புதன் கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரும் புதன் கிழமை துணை அதிபர் பொறுப்பேற்கவுள்ளார்.

அவர் ஏற்கனவே செனட் உறுப்பினராகப் பதவி வகித்து வந்த நிலையில் அப்தவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் ஜோ பிடன் பதவியேற்கவுள்ள வெள்ளை மாளிகை முழுவதும் வண்ணமயமாக அலங்காரங்களுடன் காட்சி அளிக்கிறது.

அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதில் இப்பதவிக்கு வரும் ஜோ பிடன் தன் வாழ்க்கையில் மிக அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவர். இவர் 4 வயது முதல் திக்கிப் பேசும் குறைபாடுடையவராக இருந்தாலும் அதை சமாளித்து இப்பெரிய பதவியை அடைந்துள்ளார்.

ஒட்டுமொத்த உலகமும் வெள்ளை மாளிகையில் பிடன் பதவியேற்கும் போது என்ன பேசுவார் என்பதைக் காணவும் என்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதைக் கேட்க  ஆவலாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்