டைட்டானிக்கின் உடைந்த பாகங்களை காண சென்ற 5 பேர் கொண்ட நீர்மூழ்கி கடலுக்கடியில் மாயமான சம்பவம் குறித்து ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்துள்ளார்.
110 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தின் சௌத்தாம்டனில் இருந்து நியூயார்க் புறப்பட்ட மிக பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் அட்லாண்டி கடலில் பனிப்பாறையில் மோதி நீரில் மூழ்கியது. தற்போது 12,500 அடி கடலுக்கு அடியில் கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழுவினர் OceanGate நிறுவனத்தின் நீர்மூழ்கியில் சென்ற நிலையில் மாயமானார்கள்.
அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையினர். 5 பேர் சென்ற நீர்மூழ்கி வெடித்ததால் ஏற்பட்ட உடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 5 பேரும் ஆழ்கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஜேம்ஸ் கேமரூன் “நீர்மூழ்கி மாயமான சில மணி நேரங்களில் எனக்கு தெரிந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். ஒரே சமயத்தில் நீர்மூழ்கியுடனான தகவல் தொடர்பும், ட்ராக்கிங் சிஸ்டமும் தொடர்பை இழந்துள்ளது என்றால் நீர்மூழ்கி நிச்சயம் உடைந்திருக்க வேண்டும் என்றே கருதினேன்” என கூறியுள்ளார்.
மேலும் “டைட்டானிக் பேரழிவின் ஒற்றுமையால் நான் அதிர்ச்சியடைந்தேன், அங்கு கேப்டன் தனது கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டியைப் பற்றி பலமுறை எச்சரித்தார், ஆனால் அவர் முழு வேகத்தில் நிலவு இல்லாத இரவில் ஒரு பனி பாறையில் மோதினார். இதன் விளைவாக பலர் இறந்தனர்.
அதேபோன்ற ஒரு சோகம், எச்சரிக்கைகள் கவனிக்கப்படாமல், அதே இடத்தில், உலகெங்கிலும் நடக்கும் அனைத்து டைவிங்கிலும் நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.