17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

Prasanth Karthick

திங்கள், 12 மே 2025 (11:33 IST)

வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை வன்கொடுமை செய்த கும்பல், அவரது தோழியையும் காரிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் அவரது 19 வயது தோழியும் வேலைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி மூன்று பேர் அவர்களை நொய்டாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

சிறிது நேரத்தில் அவர்கள் கடத்தப்பட்டதை உணர்ந்த பெண்கள் உதவிக் கேட்டுக் கத்தத் தொடங்கியிருக்கிறார்கள். உடனே காரிலிருந்த 19 வயது பெண்ணை ஓடும் காரிலிருந்து தள்ளிவிட்ட அவர்கள், 17 வயது சிறுமியை காருக்குள் வைத்துக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

பின்னர் அவரையும் சாலையில் போட்டுவிட்டு அவர்கள் காரில் தப்பியுள்ளனர். 17 வயது சிறுமி இதுகுறித்து காவல்நிலையம் சென்று புகார் அளித்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸார் புலந்த்ஷர் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த அந்த மூவரையும் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்கள் தூக்கி வீசியதில் படுகாயமடைந்து பலியான 19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்