மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

Prasanth Karthick

திங்கள், 12 மே 2025 (11:07 IST)

வன்னிய உள் இட ஒதுக்கீட்டில் தமிழக முதல்வர் தங்களை நம்ப வைத்து துரோகம் செய்துவிட்டதாக பாமக அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநாடு நேற்று மகாபலிபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

 

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாட்டிலே வன்னியர் சமுதாயம் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான சூழலில் உள்ளது. வன்னிய சமுதாய மக்கள் அன்றாட கூலிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும், குடிசை வீடுகளில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுக்காக இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி போராடி கடந்த அதிமுக அரசிற்கு மிகப்பெரும் அழுத்தம் கொடுத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம்.

 

தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்றபோதும் உள் ஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து நானும், ஐயா ராமதாஸ் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம். நல்ல விதமாகவே செய்து தருவதாக பேசிய அவர் கடைசியில் துரோகம் செய்துவிட்டார். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை சாதி வாரி கணக்கெடுப்பிற்கு பிறகே உறுதி செய்ய முடியும். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என சொல்லி துரோகம் செய்துவிட்டார்கள்.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை, ஆதாரங்களுடன் அதை செயல்படுத்தலாம் என எப்போதோ கூறிவிட்டார்கள். ஆனாலும் இந்த அரசு அதை செயல்படுத்தவில்லை. வாக்கு வங்கிகளாக மட்டுமே நம்மை பயன்படுத்தி வருகின்றனர்” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்