70 ஆண்டுகளாக ஆற்றில் தூங்கிய வெடிகுண்டு! – இத்தாலியில் கண்டெடுப்பு!

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (11:19 IST)
இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று 70 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1942 வாக்கில் இரண்டாம் உலகப்போர் உக்கிரமடைந்த நிலையில் நாடுகளுக்கிடையே குண்டு மழை பொழிய தொடங்கியது. இத்தாலி நாட்டில் நேச நாட்டு படைகள் பல்வேறு இடங்கலில் குண்டு மழை பொழிந்தன. அதில் பல குண்டுகள் வெடிக்காமல் புதைந்து போயின.

சமீப காலமாக அப்படியாக கண்டெடுக்கப்படும் குண்டுகளை இத்தாலி பாதுகாப்பாக வெடிக்க செய்து வருகிறது. தற்போது இத்தாலியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் பல பகுதிகளில் ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன.

இந்நிலையில் வெர்ஜிலியா பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் ஆயிரம் பவுண்டு எடை கொண்ட இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளார். பின்னட் அதை இத்தாலி ராணுவம் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்று வெடிக்க செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்