ஒரு சொட்டு தண்ணி இல்ல.. 70 ஆண்டுகளில் காணாத வறட்சி! – இத்தாலியில் அவசரநிலை!

புதன், 6 ஜூலை 2022 (08:59 IST)
இத்தாலியில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மக்கள் தண்ணீருக்கு தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் வெயில் மோசமாக வாட்டி வருகிறது. இதனால் அந்நாட்டின் நீர்நிலைகள் பல சுத்தமாக வறண்டு விட்டதால் அந்நாடு கடும் வறட்சியில் சிக்கியுள்ளது. முக்கியமாக இத்தாலியின் லோம்பார்டி, எமிலியோ ரொமாக்னா, பிரியூலி வெனிசியா, பீட்மாண்ட் மற்றும் வெனேட்டோ ஆகிய வடக்கு பிராந்தியங்களில் விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் மிக நீளமான நதியான போ நதியே வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வறட்சிக்கான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரடையாத பட்சத்தில் அரசு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்