டி20 கிரிக்கெட் போட்டியின்போது குண்டுவெடிப்பு: 4 பேர் படுகாயம்

சனி, 30 ஜூலை 2022 (09:29 IST)
டி20 கிரிக்கெட் போட்டியின்போது குண்டுவெடிப்பு: 4 பேர் படுகாயம்
டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்ததால் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு உள்ளூர் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான ஐநாவின் இணை தூதர் உள்பட பலர் நேரில் பார்த்துக் கொண்டிருந்தனர். 
 
அப்போது பார்வையாளர்கள் ரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. மைதானத்துக்கு வெளியே இருந்து கொண்டு கையெறி குண்டை மர்ம நபர்கள் வீசி உள்ளதாக தெரிகிறது.
 
இந்த குண்டு வெடிப்பு காரணமாக 4 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அந்நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பு ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தாலிபான்கள் அரசு விசாரணை செய்து வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்