சென்னை கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள்.. அதில் ஒருவர் கல்லூரி மாணவியா?

Mahendran

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (18:17 IST)
சென்னை கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதையடுத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
 
முதல்கட்ட விசாரணையில், இந்த நான்கு பெண்களில் ஒருவர் கல்லூரி மாணவி என தெரியவந்துள்ளது. கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்ற மற்ற பெண்கள் முயற்சித்தபோது நான்கு பேர் பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
கல்லூரி மாணவி ஷாலினி, தேவகி, பவானி மற்றும் காயத்ரி ஆகிய நான்கு பேர்தான் உயிரிழந்ததாகவும், இவர்களது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்