பீகார் சட்டமன்ற தேர்தலின்போது, "திமுக ஆளும் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் அவமதிக்கப்படுகின்றனர்" என்று பிரதமர் மோடி பேசியது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்படப் பலரின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
இதற்கு பதிலளித்த தமிழக முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ஸ்டாலினுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்தார்.
"'பீகாரி, வடக்கன்' என்று மக்களை பிரித்து, நாட்டில் பிரிவினையை உண்டாக்குவது திமுகதான்" என்று தமிழிசை குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி தமிழர்களை அல்ல; திமுகவினரை மட்டுமே விமர்சித்தார் என்றும் அவர் வலியுறுத்தினார்.