இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:44 IST)
"இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 492 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த ஆண்டு முதல் போர் நடந்து வரும் நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்புக்கு எதிராகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று திடீரென லெபனான் தலைநகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 492 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
தெற்கு லெபனானில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள 19 இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்த நிலையில், அந்த இடங்களில் நடத்திய தாக்குதலில் தான் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது."



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்