லிபியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு பிரசாரம்: 23 பேருக்கு மரண தண்டனை- நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (17:08 IST)
லிபியாவில் ஐஎஸ் அமைப்புக்கு பிரசாரம் செய்த 23 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லிபியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு அரசிற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர் அரசியலில் ஒரு நிலையற்று, மோதல்  நிலவி வருகிறது. இதனால், உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது, இதை, ஐஎஸ்.ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு திரிபோலி நகரில் கொரிந்தியா ஓட்டலில்  ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில், 9 பேர் பலியாகினர். இதனைத்தொடர்ந்து எகிப்திய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை நாடு கடத்தி, கொன்றனர்.

இப்படுகொலை தொடர்பாக லிபியாவின் மிஸ்ரதா நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை  நடைபெற்றது. இதில், 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, மேலும் ஒரு நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும்,  6 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்