இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 3 தலைவர்கள் பதவி விலகல்

வெள்ளி, 26 மே 2023 (20:20 IST)
பாகிஸ்தான் நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் இம்ரான் கானின் தெஹ்ரீக்  - இ  - இன்சாப் கட்சியை சேர்ந்த 3 தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில்,  கடந்த 9 ஆம் தேதி ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரேஞ்சர் படையினர் கைது செய்தனர்.
அதன்பின்னர்,  நீதிமன்ற உத்தரவுப்படி, இம்ரான் கான் விடுக்கப்பட்டார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியினர்( தெஹ்ரீக்  இ  இன்சாப்)  போராட்டம் நடத்தினர். இது வன்முறையாகி அந்த நாட்டின் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தியதாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த விசாரணை   நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர், இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ  -இன்சாப் கட்சியை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில்,  அமைச்சராக இருந்த ஷரீன் மசாரி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு  முன்னாள் மந்திரி பவாத் சவுத்ரி தன் பதவியை ராஜினாமா செய்தார் ர்.

இவர் இம்ரான் கான் ஆட்சியில் தகவல்- ஒளிபரப்புத்துறை மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் ஆவார்.

கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள இவர், அரசியலைவிட்டு விலகப்போவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் இம்ரானின் நெருக்கமானவருமான  ஆசாத் உமர் தன் பதவியையுமம் மையக்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 'என்னால் இனிமேல் கட்சியை வழி நடத்த முடியாது அதனால், பதவி விலகுகிறேன்' என்று கூறியுள்ளார்.

இதேபோல் மலிகா பொக்காரி மற்றும் சீமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த 24 மணி  நேரத்தில்   3 முக்கிய தலைவர்கள் இம்ரான் கான் கட்சியில் இருந்து பதவி விலகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்