இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில், கடந்த 9 ஆம் தேதி ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரேஞ்சர் படையினர் கைது செய்தனர்.
அதன்பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி, இம்ரான் கான் விடுக்கப்பட்டார்.
இதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர், இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ -இன்சாப் கட்சியை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில், அமைச்சராக இருந்த ஷரீன் மசாரி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள இவர், அரசியலைவிட்டு விலகப்போவதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால், அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.