இப்படம் கடந்த 5 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான நிலையில், இப்படத்தில் 32,000 இந்து பெண்களை மூளைச் சலவை செய்து,மதம் மாற்றி அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் சேர்ததாகச் சித்தரித்திருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், கேரளா, தமிழ் நாடு, மேற்குவங்காளம் உள்ளிட்ட மா நிலங்களில் பலத்த எதிர்ப்பு நிலவியது.
சமீபத்தில் நடிகை அதா சர்மா, சமூக ஊடக பயனர் ஒருவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில், நடிகை அதா சர்மாவின் தனிப்பட்ட விவரங்களும் வெளியானது. அவரது புதிய தொடர்பு எண்ணையும் வெளியில் கசியவிடுவதாக அந்த நபர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.