பேத்தி, பாட்டி இரட்டை கொலை: அமெரிக்காவில் மரண தண்டனை பெறும் முதல் இந்தியர்!

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (10:49 IST)
ஆந்திராவை சேர்ந்த ரகுநந்தன் யண்டமுரி அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்குதான் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் மரண தண்டனை பெறும் முதல் இந்தியராக இவர் உள்ளார். 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அப்போது அதே குடியிருப்பில் இருந்த ஒரு தெலுங்கு குடும்பத்தினரோடு பழக்கம் ஏற்பட்டது. அந்த குடும்பத்தை சேர்ந்த தம்பதியினர் இருவரும் பணிக்கு செல்வதால் தங்களது 10 மாத குழந்தையை அவரது பாட்டி கவனித்து வந்தார். 
 
எனவே, ரகுநந்தன் குழந்தையை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். அப்போது பாட்டி தடுத்ததால் அவரை கொலை செய்து குழந்தையை கடத்தியுள்ளார். குழந்தை அழுதுக்கொண்டே இருந்ததால், அதன் வாயிற்குள் துணியை திணித்து பெட்டிக்குள் வைத்து அடைத்துள்ளார். 
 
மேலும், வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை திருடி எடுத்துக்கொண்டு குழந்தையையும் கொலை செய்து குடியிருப்பு பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் லாக்கரில் போட்டுவிட்டார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீஸார் ரகுநந்தனை கைது செய்தனர். தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்