கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை; அரசின் அதிரடி முடிவு

செவ்வாய், 9 ஜனவரி 2018 (10:11 IST)
உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தற்போது கள்ளச்சாராயத்துக்கு எதிராகவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சினால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மாநில கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசீலித்த கவர்னர் ராம்நாயக் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இது போன்ற கடும் நடவடிக்கையின் மூலம் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று நம்புவதாக அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்