ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (07:30 IST)
உலகம் முழுவதும் நேற்று கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகிலேயே நேற்று கொரோனாவால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் 62000 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்கா, இந்தியாவை அடுத்து பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 21 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,51,246 ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89,06,297ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,13,146 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை 39,61,429ஆக உயர்ந்துள்ளது என்பதும் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,43,834ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசிலில் 80,000 பேரும், இந்தியாவில் 28,000 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
 
பிரேசிலில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 718 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு நாளில் 596 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 503 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் மட்டுமின்றி பலி எண்ணிக்கையிலும் நேற்று இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்