கேரளாவில் இன்று ஒரே நாளில் 794 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

திங்கள், 20 ஜூலை 2020 (20:18 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்திக் கொண்டே வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது
 
தினமும் 500 க்கு மேல் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ள நிலையில் இன்று 794 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது இதனை அடுத்து கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,274 என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இன்று கேரளாவில் கொரோனாவுக்கு ஒரே ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளதால் கேரளாவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் இதுவரை 5618 என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை ஒப்பிடும்போது கேரளாவில் மிகக் குறைந்த அளவே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்