முடிந்தது இம்ரான்கானின் அரசியல் வாழ்க்கை.. பாகிஸ்தான் அரசு எடுத்த அதிரடி முடிவு..!

Mahendran
திங்கள், 15 ஜூலை 2024 (17:26 IST)
இம்ரான்கான் அரசியல் கட்சியை நிரந்தரமாக தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்ததாக கூறப்படும் நிலையில் இம்ரான்கானின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகப் போவதாக கூறப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்கவில்லை என்ற ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தற்போது இம்ரான் கான் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் சிறையில் உள்ளனர்.

இம்ரான் கான் மீது ஒரே நேரத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு வழக்காக அவர் ஜாமீன் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இம்ரான் கானின் அரசியல் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கை காரணமாக இனிமேல் இம்ரான் கான் கட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. தேச விரோத செயல்களில் ஈடுபட்ட இம்ரான் கட்சி இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படும் நிலையில் அவருடைய அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்