ஃபோனை அன்லாக் செய்ய மறுத்த கணவர்: கணவரை லாக் செய்த மனைவி – வைரல் வீடியோ!

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (19:09 IST)
ஃபோனை அன்லாக் செய்து தர மறுத்த கணவரை பெண் ஒருவர் ரவுண்டு கட்டி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மொபைல் போன்களும், கணக்கற்ற கேளிக்கை அப்ளிகேசன்களும் வந்ததில் இருந்து கணவன், மனைவி இடையேயான இடைவெளிகள் கூடிக்கொண்டே போகின்றன. வீட்டில் இருக்கும் சமயங்களிலும் ஒருவரோடு ஒருவர் பேசி கொள்ளாமல் மொபைல் போன்களிலேயே மூழ்கி விடுகின்றனர். சில சமயம் மொபைல் போன்களால் வீட்டில் பிரச்சினையே வெடித்து கணவன் , மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் போன்றவையும் நடைபெறுகின்றன.

இப்படி ஒரு கணவன், மனைவி இடையே மொபைலால் ஏற்பட்ட சண்டைதான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. பெண் ஒருவருக்கு தன் கணவர் தன்னை தவிர வேறு யாருடனோ பழக்கத்தில் இருப்பதாக சந்தேகம் போல! அதை உறுதி செய்துகொள்ள கணவரிடம் அவரது போனை கேட்டு வாங்கி பார்த்திருக்கிறார். ஆனால் அந்த கணவர் உஷாராக தனது முகத்தை அதன் லாக்-ஆக பயன்படுத்தி வந்துள்ளார். அவரது முகத்துக்கு நேராக போனை காட்டினால் மட்டுமே போன் அன்லாக் ஆகும்.

அந்த மனைவி போனை கணவர் முகத்தின் முன் காண்பிக்க முயற்சிக்க, கணவரோ முகத்தை மறைத்து கொண்டு ஓட முயற்சிக்கிறார். கடைசியாக வளைத்து பிடித்த அந்த பெண் கணவரின் முகத்தை காட்டி போனை அன்லாக் செய்து விடுகிறார். அதில் என்ன இருந்தது, அடுத்து அந்த கணவர் என்ன ஆனார் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் போனுக்கு எவ்வளவு பெரிய லாக் போட்டு வைத்தாலும், மனைவிகள் சாமர்த்தியம் முன்னாள் இந்த லாக்குகள் ஒன்றுமே இல்லை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்