மோடி பிரதமரா? குடியரசு தலைவரா? கன்ஃப்யூஸ் ஆகிய இம்ரான் கான், பங்மாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Arun Prasath

சனி, 28 செப்டம்பர் 2019 (10:29 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐ.நா.சபையில் உரையாற்றிய போது, மோடியை குடியரசு தலைவர் என கூறியதை சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சனையை குறித்தும் அணு ஆயுதங்கள் குறித்தும் அதிக நிமிடங்கள் உறையாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் உரையாற்றும் போது, பிரதமர் மோடியை குடியரசு தலைவர் மோடி என தவறுதலாக கூறியுள்ளார். இதனை சமூக வலைத்தளவாசிகள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், ”பொய்களாக வாந்தி எடுக்கும்போது, உண்மை மறந்துவிடுவது சகஜம்” தான் என கேலி செய்துள்ளார். மற்றொருவர், இம்ரான் கான் தன்னுடைய சுயநினைவை இழந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என கூறி பங்கமாய் கலாய்த்துள்ளார். இது போல் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்