இரண்டு மாத போராட்டம் வெற்றி – திரும்ப பெறப்பட்டது மசோதா!

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (13:35 IST)
ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு கொண்டு செல்லும் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் இரண்டு மாத காலமாக போராடியதால் மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது.

ஹாங்காங் கைதிகளை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்கும் புதிய மசோதா ஒன்றை ஹாங்காங் அரசாங்கம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலைகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். மக்கள் போராட்டம் பல இடங்களில் கலவரமாக மாறியது.

மக்களை ஒடுக்க போலீஸாரை களம் இறக்கியது ஹாங்காங் அரசு. ஆனாலும் லட்சக்கணக்கில் குவிந்த மக்களை போலீஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்காங்கே கலவரங்கள் நடைபெற்றதால் மசோதா மீதான தீர்மானத்தை தள்ளி வைத்திருந்தனர்.

மசோதாவை முற்றிலும் தள்ளுபடி செய்யும்படி கோரிக்கை வைத்த மக்கள் கடந்த சில வாரங்கள் முன்பு ஹாங்காங் விமான நிலையத்தையே முற்றுகையிட்டனர். இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. பிறகு ஹாங்காங் ராணுவம் அங்கு போராட்டம் நடத்தியவர்களை அதிரடியாக வெளியேற்றியது. பல இடங்களில் ஹாங்காங் ராணுவம் மக்களை ஒடுக்க தொடங்க போராட்டம் மேலும் பெரிதானது.

தொடர்ந்த போராட்டங்களால் சிறை மசோதாவை கைவிட வேண்டிய நிலையில் இருக்கிறது ஹாங்காங் அரசு. தற்போது மசோதா நிறைவேற்ற போவது இல்லை எனவும் போராட்டத்தை கைவிடும்படியும் மக்களை ஹாங்காங் அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக ஹாங்காங் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்