பிரபல ஹாலிவுட் நடிகை அலீஸா மிலானோ என்பவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து டுவிட்டரில் தெரிவித்துவிட்டு தன்னை போல் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இந்த ஹேஷ்டேக்கை ஆதரியுங்கள் என்று கூறி 'மீ டூ' என்ற ஹேஷ்டேக்கை தொடங்கினார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலமாகியது. தற்போது சின்மயி உள்பட பலர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்திதான் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆண்கள் மீது எப்போதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை ஒருசில பெண்கள் சுமத்தி வருவதாக கூறிய அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் 'மீ டூ' ஹேஷ்டேக்கிற்கு எதிராக 'ஹிம் டூ' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த ஹேஷ்டேக்கிற்கும் நல்ல ஆதரவு கிடைத்து வந்தது.
இந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கை ஆரம்பித்த பெண்ணின் மகனே 'தான் இந்த ஹேஷ்டேக்கை தான் ஆதரிக்கவில்லை என்றும், சில சமயம் நமக்கு நெருக்கமானவர்களால் நமக்கு சில தர்மசங்கடங்கள் தோன்றும் என்றும், அதனையும் கடந்து செல்வதுதான் வாழ்க்கை என்றும் கூறியுள்ளார்.