இதனையடுத்து, டிவிட்டரில் ‘கள்ளதுப்பாக்கிதிமுக’ என்கிற ஹேஷ்டேக் இன்று காலை முதலே டிரெண்டிங்கில் இருந்தது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் கருத்து தெரிவித்ததால், ஒருகட்டத்தில் அந்த ஹேஷ்டேக் முதலிடத்திற்கு வந்தது.
சமீபத்தில்தான், விருகம்பாக்கம் பகுதியில் திமுக பிரமுகர் யுவராஜ் இலவச பிரியாணிக்காக குத்து சண்டை போட்ட போது “ ஓசிபிரியாணிதிமுக” என்கிற ஹேஷ்டேக் வைரலனாது. இதனால், மு.க.ஸ்டாலின் அந்த உணவகத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறும் நிலை உருவானது.
இந்நிலையில்தான், அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் மற்றொரு திமுக பிரமுகர் சிக்கியுள்ளார். இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.