தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, இமயமலைக்கு சென்றுள்ளார் என்றும், அதன் பின்னர் அங்கிருந்து டெல்லி சென்று பாஜக முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 39 தேசிய குழு உறுப்பினர்களில் ஒருவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலை திடீரென நேற்று இமயமலைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையிலிருந்து டெல்லி சென்ற அவர், அங்கிருந்து ஆன்மீக இமயமலை பயணத்தை தொடங்கியதாகவும், இமயமலையில் ஆன்மீக பயணத்தை முடித்த பின்னர் மீண்டும் டெல்லி சென்று, பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.