வடக்கு இத்தாலியில் கனமழை, வெள்ளம் - 9 பேர் பலி

Webdunia
வியாழன், 18 மே 2023 (16:50 IST)
இத்தாலி நாட்டில் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்குள்ள வடக்கு எமிலியா ரோமக்னா என்ற பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அங்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி  9 பேர் பலியாகியுள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தல் ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, இத்தாலி நாட்டு பாதுகாப்பு அமைச்சர், கனமழையால் பல ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்ற நிலையில், நரகங்கள் வழியாக வெள்ளம் பாய்ந்து, பல ஆயிரக்கணக்கான  ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தாலியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்  37  நகரங்களைத் தாக்கியுள்ளதாகவும், 120 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்