பிணைக்கைதிகளை சித்ரவதை செய்கிறதா ஹமாஸ்? வீடியோ வெளியானதால் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (07:57 IST)
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் பிணைக் கைதிகளை சித்ரவதை செய்வதாகவும், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் 6 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த 150 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் ராணுவம் வீசும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு பிணைக் கைதியை கொல்வோம் என்று  எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததுஜ்.

இந்நிலையில், பிணைக் கைதியாக உள்ள ஒரு குடும்பத்தினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் பிணைக் கைதிகளை சித்ரவதை செய்யும் காட்சி உள்ளது.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் மிரட்டலை கண்டு அஞ்ச மாட்டோம் என்றும் தொடர்ந்து தாக்குதல் நடக்கும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது,.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்