இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள்.. இந்திய தூதரகம் அறிவிப்பு..!

புதன், 11 அக்டோபர் 2023 (16:07 IST)
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனில் உள்ள இந்தியர்கள் பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதி இருக்கும் அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு 24 மணி நேர அவசர கால உதவிக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு, இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களுக்கான உதவி எண்கள் 972-35226748, 972-543278392, இந்த எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்