வெள்ளை மாளிகைக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மகள்!

Webdunia
புதன், 26 மே 2021 (21:20 IST)
வெள்ளை மாளிகைக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மகள்!
வெள்ளை மாளிகைக்கு ஜார்ஜ் ஃபிளாய்ட் மகள் விருந்தினராக அழைக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த ஆண்டு ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பு இனத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் மீது கொலை செய்தனர். இது குறித்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் அமெரிக்காவில் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளை நேரில் சந்திக்க வேண்டுமென அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வெள்ளை மாளிகை விருந்தினராக ஜார்ஜ் ஃபிளாய்ட் மகள் அழைத்து வரப்பட்டார். ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளை நேரில் சந்தித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவருக்கு ஆறுதல் கூறினார். அவரது கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்