முதல்ல இல்லாட்டியும் பரவாயில்ல கடைசியா இருக்க கூடாது! – கமலா ஹாரிஸ் தாய் சொன்ன மந்திரம்!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (11:59 IST)
அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் தனது தாய் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தனது வெற்றி குறித்து பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ் “இது என் கதை அல்ல. அமெரிக்காவின் கதை. என் தாய் சியாமளா கோபாலன் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இங்கு வந்தார். அவரது 19வது வயதில் இங்கு வந்தபோது இந்த உயரங்களை அடைவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். என்னையும், எனது சகோதரியையும் திறமையானவர்களாக வளர்த்தார். எப்போது முதலில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை கடைசியில் இருக்க கூடாது என கூறுவார். அவர்தான் எனக்கு உந்துதல்” என தெரிவித்துள்ளார்.’

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்