மறைந்த முன்னாள் அதிபருக்கு மரண தண்டணை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Mahendran
வியாழன், 11 ஜனவரி 2024 (14:49 IST)
முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்ப்  மீதான வழக்கு ஒன்றில் அவரது மரணத்திற்கு பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அறிமுகம் செய்தார். இதனை அடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 
 
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மேல்முறையீடு வழக்கு கடமைய சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 
 
இந்த நிலையில் மேல் முறையீடு வழப்பின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த தீர்ப்பில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் வசித்து வந்த பர்வேஸ் முஷாரப் உடல்நல குறைவால் காலமான நிலையில் அவரது மரணத்திற்கு பிறகு அவருக்கு மரண தண்டனையை நீதிமன்றம் விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்