பசிக்கு இலவசமாக உணவு தரும் ஹோட்டல் ! குவியும் மக்கள்

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (16:56 IST)
அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் மக்கள் எவரேனும் பசிக்கிறது என்றால் இலவசமாக உணவு தருவது அங்குள்ள மக்களுக்குப் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது 
நம்மூரில் உள்ள ஹோட்டலில்  ’கையில் காசு வாயில் தோச’ என்றுதான் வழக்கம் உண்டு. ஆனால் அமெரிக்காவில் வித்தியாசமான சம்பவம் நடந்துவருகிறது. 
 
அதாவது, அமெரிக்காவில் வெள்ளை மாளிக்கைக்கு அருகில் உள்ள பகுதியில் சகீனா ஹலால் கிரில் என்ற விடுதியுள்ளது. இந்த விடுதியின் உரிமையாளர் கசி மன்னராவர்.
 
இவரது விடுதி கடந்த 2013 ஆம் ஆண்டில் ஹோட்டல் தொடங்கப்பட்டது.அப்போதிலிருந்து பசிக்கிறது சாப்பாடு வேண்டும் யார் கேட்டாலும் சப்பாடு வழங்கப்படுகிறது.
 
மேலும் இந்த ஹோட்டலுக்குள் நுழைந்து காசு கொடுத்து சாப்பிடுபவர்களுக்கு உண்டான அதே மதிப்புதான்  பசிக்கு இலவசமாக உணவு சாப்பிடுபவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
 
இதுகுறித்து கசி மன்னர் கூறியதாவது :
 
’பாகிஸ்தான் தேசத்தில் பிறந்தவன் நான். சிறுவயதில் ஏழ்மையில் தவித்தேன். அந்தப் பசியும் கொடூரமும் எனக்குத்தெரியும். நான் அமெரிக்காவில் வந்து தங்கி மேன்மையான நிலைக்கு வந்ததும் பல மக்கள் பசியால் இருப்பதை அறிந்தேன். அவர்களுக்கு ஆதரவாக தற்போது  இந்த விடுதியில் உணவளித்து வருகிறேன் ’என்று தெரிவித்தார். இது பலராலும் பாரட்டுப் பெற்றுவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்