இன்று மீண்டும் சரிந்தது பங்குச்சந்தை.. முதலீடு செய்ய சரியான நேரமா?

Siva

புதன், 16 ஜூலை 2025 (11:25 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இந்த வாரத்தில் நேற்று முன் தினம் இறக்கத்திலும், நேற்று ஏற்றத்திலும் இருந்த நிலையில், இன்று மீண்டும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 189 புள்ளிகள் சரிந்து 82,376 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 61 புள்ளிகள் சரிந்து 25,150 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., ஸ்டேட் பேங்க் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதே நேரத்தில், டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, ஜியோ ஃபைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், சிப்லா, ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்