3 நிறங்களில் வருகிறது வெரிஃபைட் டிக்: எலான் மஸ்க் அறிவிப்பு
டுவிட்டரில் இதுவரை புளூடிக் மட்டுமே வெரிஃபைட் டிக் ஆக இருந்து வரும் நிலையில் மூன்று நிறங்களில் தற்போது வெரிஃபைட் டிக் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தை சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதையும் அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் புளூடிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த கட்டணத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது மூன்று விதமான வெரிஃபைட் டிக் கொடுக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு கோல்ட் நிறத்திலும் அரசு நிறுவனங்களுக்கு சாம்பல் நிறத்திலும் தனிநபர்களுக்கு நீல நிறத்திலும் வெரிஃபைட் டிக் வழங்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கை