நாளொன்றுக்கு ரூ.2500 கோடி இழந்து வரும் எலான் மஸ்க்

செவ்வாய், 22 நவம்பர் 2022 (16:42 IST)
உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா என்ற முன்னணி எலக்ட்ரிக் கார், ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வுக்கான ராக்கெட் உள்ளிட்டவற்றியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்,  சமீபத்தில் இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதுடன் அந்த நிறுவனத்தில் இருந்த சில ஆயிரம் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ALSO READ: இந்தப் பதவியின் மீது எனக்கு விருப்பமில்லை -எலான் மஸ்க்
 
இந்த நிலையில்,  பிரபல நாளிதழான புளூம்பெர்க் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டிருந்தது. அதில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 2022 ஆம் ஆண்டில் மட்டும் 37% குறைந்து( 101 பில்லியன் டாலர்), தினமும் அவருக்கு ரூ.25000 கோடி இழந்துவருவதாகவும், அவரது சொத்து மதிப்பு தற்போது 170 பில்லியன் டாலர்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அவர் சென்றால், அவர் டாப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை இழக்க நேரிடும் என தெரிகிறது.

 

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்