உலகை அச்சுறுத்தும் அடுத்த வைரஸ் ‘டிசீஸ் எக்ஸ்’ – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (09:56 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற புதிய வகை வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சில நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற புதிய வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாக இபோலா வைரஸை கண்டறிந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காங்கோவில் பெண் ஒருவருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு இபோலா வைரஸ் தொற்று இல்லை எனவும், ஆனால் அது புதுவிதமான தொற்றாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இந்த வைரஸ்க்கு ‘டிசீஸ் எக்ஸ்;’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதுவும் கொரோனா போல வீரியமுடன் பரவக்கூடிய தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்