என்னடா அது வானத்துல.. நீல கலர்ல..!? ஏலியனா? – ஹவாய் மக்கள் அதிர்ச்சி!
செவ்வாய், 5 ஜனவரி 2021 (14:23 IST)
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இரவு நேரத்தில் வானில் நீல நிறத்தில் பறந்து சென்ற பொருளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் நேற்று இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நீல நிற பொருள் ஒன்று பறந்து சென்றுள்ளது. இதை ஹவாய்யின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பலர் பார்த்த நிலையில் அதை சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர்.
அந்த நீல நிறத்தில் இருந்தது பறக்கும் தட்டு எனவும், இது ஏலியன்களின் வேலை எனவும் வழக்கம்போல சதிகோட்பாட்டாளர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.