ஒரே நாளில் பெய்த ஒரு ஆண்டு மழை.. துபாய் விமான நிலையம் முடக்கம்..!

Siva
வியாழன், 18 ஏப்ரல் 2024 (07:25 IST)
துபாயில் வரலாறு காணாத மழை பெய்ததை அடுத்து துபாய் சர்வதேச விமான நிலையம் முடக்கப்பட்டதாகவும் துபாயில் உள்ள பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக துபாய் போன்ற அரபு நாடுகளில் மழை பெய்வது அரிதாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை கொட்டியது. வரலாறு காணாத கனமழை காரணமாக துபாய் தெருக்களில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும் குறிப்பாக துபாய் விமான நிலையம் தண்ணீர் தேங்கியதால் விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பெரும் மழை வெள்ளம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் முடங்கியுள்ளது. நேற்று மட்டும் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன என்றும்,  440  விமானங்களை தாமதமாக இயக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானங்கள் இரண்டாவது நாளாக இன்றும் ரத்து  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து அபுதாபி, சார்ஜா, குவைத்திற்கு செல்லும் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்