ஐக்கிய அரபு எமிரேட்சில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் துபாய் விமான நிலையம்..!

Siva

புதன், 17 ஏப்ரல் 2024 (07:40 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் என்றால் பாலைவன நாடுகள் என்றும் அங்கு பொதுவாக மழை பெய்வது இல்லை என்ற கருத்து இருந்து வருகிறது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் திடீரென நேற்று காண மழை பெய்தது. குறிப்பாக துபாய் விமான நிலையம் வெள்ளத்தில் தத்தளித்து வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று திடீரென ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் தொடர் கனமழை பெய்ததாவும் இதன் காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஓமனி என்ற பகுதியில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஐ தாண்டி உள்ளதாகவும் ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சூறாவளி காற்றுடன் கூடிய வரலாறு காணாத மழை காரணமாக துபாய் மக்கள் கடும் பாதிப்பில் இருப்பதாகவும் குறிப்பாக துபாய் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக திடீரென துபாய் உள்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கன மழை மற்றும் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டில் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்