உத்தரப் பிரதேச மாநிலம் அமரோகா மாவட்டத்தில், வரதட்சணை கேட்டு மனைவியை தீ வைத்துக் கொளுத்த முயன்றதாக, காவலர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாரங்பூர் கிராமத்தை சேர்ந்த பருல் என்ற செவிலியர் கிராமப்புற சுகாதார மையத்தில் பணிபுரிகிறார். வரதட்சணை கொடுமையால் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பருல் கணவர் தேவேந்திரா வரதட்சணை கோரி துன்புறுத்தியதாகவும், வரதட்சணை கிடைக்காததால், தனது மனைவி பருலை உயிரோடு எரிக்க முயன்றதாக அவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில், தேவேந்திரா, அவரது மாமியார், மைத்துனர் மற்றும் சோனு, கஜேஷ், ஜிதேந்திரா, சந்தோஷ் ஆகிய மூன்று உறவினர்கள் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.