சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

Prasanth K

புதன், 27 ஆகஸ்ட் 2025 (15:19 IST)

இன்று பீகாரில் ராகுல்காந்தி நடத்திய வாக்கு திருட்டுக்கு எதிரான பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்ட நிலையில், அவர் குறித்து அன்புமணி பதிவிட்டுள்ளார்.

 

தனது எக்ஸ் தளத்தில் பீகார் குறித்தும், அதன் சமூகநீதி அணுகல் குறித்தும் பதிவிட்டுள்ள அன்புமணி “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிகாருக்கு சென்றுள்ளார். புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பிகாரின் புத்த கயாவில் தான் இருந்தது.

 

அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங்,  சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பிகார் தான்.

 

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பிகார் தான். 

 

அத்தகைய சிறப்பு மிக்க பிகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

 

சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்