ஆறுவருட போராட்டங்களுக்கு பிறகு சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரம் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக சிரிய ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் பல்வேறு இடங்களில் சிரிய அதிபர் எதிராக கடந்த ஆறு ஆண்டுகளாக போராடி வந்த கிளர்ச்சியாளர்கள் 80% தோல்வி அடைந்ததால் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது டமாஸ்கஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு போரின் போது சிரியா அதிபருக்கு ரஷ்யாவும் ஈரானும் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளித்தன என்பது குறிபிடத்தக்கது.