ஏனென்றால் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த போது, திமுக மேலிடத்தை அதிகமாக கவனித்து இருப்பார் என்றும் கடுமையாக சாடினார். அதனால்தான் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்று எடப்பாடி தெரிவித்தார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நீதிமன்றத்தின் நிபந்தனைகளை செந்தில் பாலாஜி பின்பற்றுவாரா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, ஒருவேளை நீதிமன்றத்தின் நிபந்தனைகளை அவர் பின்பற்றவில்லை என்றால், காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? எனவும் வினவியுள்ளார்.