கடந்த சில ஆண்டுகளாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக முன்பும் பலமுறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இன்றும் நெடுந்தீவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 17 மீனவர்களை, இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்கள் காங்கேசன் துறை கடற்கரை முகாமில் இலங்கை கடற்படை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீன்பிடித்த வலைகளை இலங்கை கடற்படை வெட்டி வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கு இதுகுறித்து பலமுறை கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்தபோது கூட, இவ்விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.