இவை, பல தசாப்தங்களுக்கு பிறகு சிரியா மீது இஸ்ரேலால் நடத்தப்பட்ட மிக கடுமையான தாக்குதல்களாகும். ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸிலுள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகளின் மீது 20 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இரானிய புரட்சிகர ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதனை நேரடியாக உறுதி செய்யாத அல்லது மறுக்காத இரான், ஒருதலைபட்சமான, அடிப்படையற்ற சாக்குப்போக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்கள் என்று தெரிவித்துள்ளது.
சிரியாவின் ராணுவத்தின் ஆலோசகர்களாக செயல்பட நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை இரான் சிரியாவில் நிலைநிறுத்தியுள்ளது. இரானால் பயிற்சியளிக்கப்பட்டு, நிதி ஆதரவு அளிக்கப்படும் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கானோர் சிரிய படையினருடன் சேர்ந்து கிளர்ச்சிப் படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.