உலக போருக்கு தயாராகும் ரஷ்யர்கள்?

திங்கள், 23 ஏப்ரல் 2018 (11:25 IST)
சிரியாவில் போர் பதற்றம் நிலவி வருகிரது. சிரியாவில் அரசு தரப்பிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நடபெற்று வருகிறது. இதனால், மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
 
சமீபத்தில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியா ராசயன ஆலைகள் மீது தாக்குதல் நடத்தின.
 
ஏற்கனவே, சிரியாவுக்கு ஆதரவாக செயல்படும் ரஷ்யா, சிரியா மீது தாக்ககுதல் நடத்தினால், போர் வெடிக்கும் என எச்சரித்து இருந்தது. தற்போது, போரின் போது ரஷ்யர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 
ஆம், ரஷ்யாவின் பிரபல தொலைக்காட்சியான Rossiya 24 என்கிற தொகைக்காட்சி நிறுவனம் இது குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில், சிரியாவில் பிரச்சனை நீடித்து வருவதால், உலக போர் துவங்கும் சூழல் அதிகரித்துள்ளது. 
 
இதனால், வெடிகுண்டு மற்றும் அணு ஆயுத முகாம்களில் ரஷ்யர்கள் ஐயோடின் சத்து நிறைந்த உணவுகளைச் நிச்சயம் வைத்திறுக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. 
 
கதிரியக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இது உதவும். பாஸ்தா, சாக்லெட், இனிப்பு வகை உணவுகளை தவிக்கவும். தண்ணீர், ஓட்ஸ், பவுடர் பால், சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட மீன், மருந்துகள் ஆகியவற்றை கையிருப்பாக வைத்துக்கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்