சைப்ரஸ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (08:25 IST)
மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில் இஸ்ரேலுக்கு வடக்கே அமைந்துள்ள தீவு நாடு சைப்ரஸ். இந்த சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.5 ஆக இந்த நிலநடுக்கும் பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றாலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்